விக்ரம் படம் 4 படத்துக்கு சமம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து ‘கைதி’ எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து ‘மாஸ்டர்’ எனும் வெற்றி படத்தை இயக்கினார்.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ‘ விக்ரம் படத்திற்காக 4 படத்தின் வேலையை ஒன்றாக செய்துள்ளோம் ‘ என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!