புதிய அவதாரத்தில் இயக்குனர் ராம்

தமிழின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராம், புதிய அவதாரம் எடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பின் தங்கமீன்கள், தரமணி, பேரண்பு போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். வெகு சில படங்களையே இயக்கிருந்தாலும் தனக்கான ரசிகர்களை கவர்ந்து முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். 

இவர் தற்போது புதிய அவதாரம் எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஹரிஹரன் இயக்கியுள்ள ”இனி ஒரு காதல் செய்வோம்” என்ற சிங்கிள் டிராக் பாடலுக்கு குரல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். ரேவாவின் இசையில் கார்த்திக் நேத்தா எழுத்தியுள்ள இந்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!