எல்லாமே பொய்.. வைரலாகும் துல்கர் சல்மானின் டிரைலர்

திரைப்பட நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருப்பவர் பிருந்தா மாஸ்டர். துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்குகிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது. இதில் இடம் பெறும் எல்லாமே பொய் என்ற துல்கரின் வசனம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!