நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் காப்பியா..? அதிர்ச்சியளிக்கும் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம்.

நயன்தாரா, தம்பி ராமையா, அனிகா, ரோபோ சங்கர், ஜாபதி பாபு என திரையுலக பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் ரூ. 187 கோடி வரை வசூல் செய்திருந்த விஸ்வாசம் படம், ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த ‘துளசி’ படத்தின் காப்பி என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துளசி.

துளசி திரைப்படம் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளும், வெங்கடேஷின், அடிதடி சண்டைகளை பார்த்து தனது குழந்தையுடன் வேறொரு ஊருக்கு நயன்தாரா சென்று விடுகிறார். இதன்பின், தனது குழந்தையை நயன்தாரா கூட்டி சென்ற ஊருக்கு சென்று வெங்கடேஷ் சந்தித்து, தனது குழந்தையுடன் சேர்கிறார்.

அதே போல் தான் விஸ்வாசம் படத்திலும் கதைக்களம் அமைந்துள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பலரும், கூறுகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!