திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஸ்ரீகாந்த் பட நாயகி..!!


தமிழில் ஸ்ரீகாந்த்துடன் ‘உயிர்’ படத்தில் நடித்த நடிகை சம்விருதா, திருமணத்துக்குப் பின் தற்போது சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

‘உயிர்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை சம்விருதா. இந்தப் படம் 2006ல் வெளியானது. இதையடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.


ஆனால், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளர். இந்நிலையில், அவருக்கு 2012ல் திடீரென்று திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப்பின் நடிப்பதை விட்டுவிட்டார்.

திருமணம் முடிந்து தற்போது 6 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் நடிகை சம்விருதா. மலையாள இயக்குனர் பிரஜித் இயக்கும் படத்தில் பிஜூ மேனனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சம்விருதா. தமிழில் நல்ல வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார் சம்விருதா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!