விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் இருக்கும் 3 இளம் இயக்குனர்களை விஜய் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் திரைப்படம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதுபோல் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லீ இயக்கி இருந்தார். இந்த மூன்று இளம் இயக்குனர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் கிளிக் செய்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!