கமல் படத்தை ரீமேக் செய்யும் நடிகர் ஷாருக்கான்.. எந்த படம் தெரியுமா

இந்திய சினிமாவை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகர் கமல் ஹாசன்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் அடுத்த தலைமுறை இயக்குனர்களுக்கு பல பாடங்களை கற்று கொடுத்துள்ளது.

அப்படி கமல் ஹாசன் இயக்கி, நடித்து கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஹே ராம்.

இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஹே ராம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து, ஷாருக்கான் நடிக்கப் போகிறார்.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அவர் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூடியவிரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!