திடீரென நடிகர் விஜய்யை அவரின் வீட்டிற்கு சென்று சந்தித்த முதலமைச்சர் !

நடிகர் விஜய் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் தளபதி 66 படத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரி முதலமைச்சரான ரங்கஸ்வாமி பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த திடீர் சந்திப்பு எதற்காக என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!