கண்ணில் நீரோடு கவனிக்கின்றன – பாடலாசிரியர் வைரமுத்து

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து ”கண்ணில் நீரோடு கவனிக்கின்றன” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரல் தமிழ் நாடு முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. நீண்ட காலமாக அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் சமீபத்தில் கவர்னர் அதை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பினார்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல் எழுந்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை. மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை. நாளை முதல்-அமைச்சர் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவை ராஜ்பவனும் ஜனாதிபதி மாளிகையும் மட்டு மல்ல இருள் கட்டிக்கிடக்கும் ஏழைக்குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!