வீரமே வாகை சூடும் திரைவிமர்சனம்

விஷால் நடிப்பில் து.பா. சரவணன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. கொரோனா மூன்றாவது அலைக்கு பின் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்று வாங்க பார்க்கலாம்.. 

கதைக்களம்
காவல் துறையில் ‘எஸ்.ஐ’ ஆகும் கனவுடன் முயற்சி செய்து வருகிறார் கதாநாயகன் போரஸ் {விஷால்}. எங்கு அநீதி நடப்பதை பார்த்தாலும், உடனடியாக கோபப்படுகிறார். இந்த கோபம், காவல் துறைக்கு நல்லதில்லை என்று விஷாலின் தந்தை தொடர்ந்து பல முறை அறிவுரை கூறினாலும், விஷால் அதனை கேட்கவில்லை.

மற்றொரு புறம், வில்லன் பாபுராஜ் நடத்தி வரும் தொழிற்ச்சாலையை எதிர்த்து ‘பரிசுத்தம்’ என்பவர் புரட்சி செய்து வருகிறார். பரிசுத்தத்தின் புரட்சியால் தனது அரசியல் கனவு, கனவாகவே போய்விடுவோம் என்று எண்ணி, முதலில் பேரம் பேசுகிறார் பாபுராஜ். ஆனால், நான் பணத்துக்கு மயங்க மாட்டேன் என்று கூறும் பரிசுத்தத்தை, போரஸ் கொலை செய்கிறார்.

இந்த கொலையை பார்க்கும், விஷுலின் தங்கையையும், அதே இடத்தில் பாபுராஜ் கொலை செய்கிறார். தங்கையின் மரணத்தால் உருக்கொலைந்துபோகிறது விஷாலின் குடும்பம். இதன்பின், தனது தங்கையை கொன்றது யார்..? எதற்காக தனது தங்கை கொலை செய்யப்பட்டார்..? என்பதை விஷால் கண்டுபிடித்தாரா..? இல்லையா..? காவல் துறையில் விஷலுக்கு ‘எஸ்.ஐ’ போஸ்டிங் கிடைத்ததா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
எப்போதும் போல் தனது நடிப்பில் சிறந்து விளங்கியுள்ளார் விஷால். ஆக்ஷன், செண்டிமெண்ட், கோபம் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். தங்கையின் சாவுக்கு நியாயம் தேடும் அண்ணனின் பாசத்தை கண்முன் நிறுத்துகிறார் விஷால். நகைச்சுவைக்காக மட்டும் இல்லாமல், நண்பன் விஷாலுக்கு உறுதுணையாக இருக்கிறார் யோகி பாபு. அறிமுக நாயகி, டிம்பிள் ஹயாதி, முதல் படத்தில் தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளார்.

விஷாலின் தங்கையாக வரும் ரவீனா, அப்பாவாக வரும் மாரிமுத்து, அகிலன், தீப்தி, இளங்கோ குமரவேல், உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். திரைக்கதையில் பல இடத்தில் க்ளாப்ஸ் வாங்கினாலும், இன்னும் சில இடங்களில் சாறுகளை சந்தித்துள்ளார் இயக்குனர் து.பா. சரவணன்.படத்தின் ரன்னிங் டைம் படத்திற்கு நெகட்டிவாக அமைந்துள்ளது.

வில்லனாக வரும் பாபுராஜ், நடிப்பில் சிறந்து காணப்படுகிறார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவிற்கு தனி க்ளாப்ஸ். குறிப்பாக சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியுள்ளார் கவின் ராஜ். என்.பி. ஸ்ரீகாந்தின் எடிட்டிங் படத்திற்கு பலம் சேர்க்கிறது.   
க்ளாப்ஸ்
விஷாலின் நடிப்பு
கதைக்களம்
செண்டிமெண்ட் காட்சிகள்
சண்டை காட்சிகள்
பல்ப்ஸ்
படத்தின் ரன் டைம்
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
மொத்தத்தில் வீரம் வாகை சூடியது..
2.75 / 5 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!