படத்தின் பெயரை மாற்றிய இயக்குனர் சுசீந்திரன் by priya | @ | February 3, 2022 9:23 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஜெய்யின் 30-வது திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதற்குமுன் இப்படத்திற்கு ”சிவ சிவா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படத்தின் பெயரை மாற்றியுள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி சிவ சிவா என்ற பெயரை மாற்றி “வீரபாண்டியபுரம்” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக சுசீந்திரன் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டதில் குறிப்பிட்டிருப்பது, இத்திரைப்படம் கிராமம் சார்ந்தது என்பதால், “சிவ சிவா” திரைப்படத்திற்கு மாற்றாக மண் சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் கூடுதல் பலம் சேர்க்கும் என்று என் நண்பர்களின் ஆலோசனையில் எனக்கும் உடன்பாடு இருந்ததால் படத்தின் பெயரை மாற்றியுள்ளேன்” என்று நீண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…