டான் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. வெளிவந்த செம சூப்பர் அப்டேட்

அட்லீயின் துணை இயக்குனர் சிபி சக்ரவத்தியின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

கல்லூரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து ‘ஜல புல ஜங்’ பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், கலகலப்பு நிறைந்துள்ள டான் திரைப்படம் வரும் மார்ச் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!