அப்படி இருந்த நீங்களா..? இப்படி ஆயிடிங்க..!! நடிகர் முத்துக்காளை.


செத்து செத்து விளையாடலாமா என்ற டயலாக்கை கேட்டால் உடனே நினைவுக்கு வருபவர் நடிகர் முத்துக்காளை.

இவர் ராஜபாளையம் அருகே உள்ள திருக்கோவில்புரத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயது முதலே ஸ்டன்ட் நடிகராக வேண்டும் என்பது ஆசை.

இதற்காக கராத்தே, சிலம்பம் போன்றவற்றை கற்று கொண்டார். இதன் காரணமாக இவருக்கு படிப்பே ஏறவில்லை.

எனவே சென்னைக்கு ரயிலேறி வந்து விட்டார். சென்னையில் சாலிகிராமத்தில் தங்கி இருந்தார். இங்கிருந்து 12 கிலோ மீட்டர் சைக்கிளிலேய மெரினா வரை சென்று பல்டி அடித்து பயிற்சி செய்வாராம்.


யாருமே நுழைய முடியாத ஏவிஎம் ஸ்டுடியோவில் நுழைவதற்காகவே இவர் 3 வருடம் அங்கு கார்பென்டராக வேலை பார்த்தார்.

எப்படியோ ஒரு வழியாக தனது 30வது வயதில் 1990ல் ஸ்டண்டு நடிகராக சேர்ந்தார். ரஜினி, கமலுடன் பல படங்களில் ஸ்டண்டு காட்சிகளில் நடித்துள்ளார்.

இவரது திறமையை பார்த்து ஸ்டண்டு மாஸ்டர் சிவாதான் காதலுக்கு மரியாதை படத்தில் வேலை பார்க்க வைத்தார். பின்னர் பொன்மனம் படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பிரபுவுடன் நடிக்க வைத்தார்.

பின்னர் என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் செத்து செத்து விளையாடலாமா காமெடி இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் கமெடியனாக நடித்துள்ளார். இவர் கடைசியாக விந்தை படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!