தளபதி விஜய்யிடம் பிரியங்கா சோப்ரா கற்ற விஷயம்: ஹாலிவுட் போனாலும் இதை கடைபிடிக்கிறாராம்

பிரியங்கா சோப்ரா தற்போது உலக அளவில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் அவர் ஹாலிவுட் சினிமாவில் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரியங்கா சோப்ரா நடிகையாக முதன்முதலில் அறிமுகம் ஆனது தளபதி விஜய்யின் தமிழன் படத்தில் தான். அப்போது தான் விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

“என்னை influence செய்தவர்களில் விஜய்யும் ஒருவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வந்துவிட்டால் (கேரவனுக்கு) செல்லவே மாட்டார். அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது அது. தற்போதும் நான் இதை கடைபிடித்து வருகிறேன். நானும் செட்டில் தான் இருப்பேன். பல ஷாட்கள் ஏன் எடுக்கிறோம் என புரிந்துகொள்ள விரும்புவேன். படக்குழுவினருடன் பேசுவேன்” என பிரியங்கா சோப்ரா தெரிவித்து உள்ளார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!