தமிழ் ராக்கர்ஸ் – விமர்சனம்

நடிகர் பிரேம்ஜி அமரன்
நடிகை மீனாட்சி தீட்சித்
இயக்குனர் பரணி
இசை பிரேம்ஜி அமரன்
ஓளிப்பதிவு எல்.கே.விஜய்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி, கார் மெக்கானிக்காகவும் கார் ரேசராகவும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் அக்கா தேவர்தர்ஷி மற்றும் மாமா விடிவி கணேஷின் அரவணைப்பில் இருந்து வருகிறார். விடிவி கணேஷும், தொழிலதிபர் எஸ்.பி.பி.சரணும் நெருங்கிய நண்பர்கள். ஒரு தொழிலுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி சரணை கடன் வாங்க சொல்கிறார் விடிவி கணேஷ்.

அதன்படி அவரும் ஒருவரிடம் கடன் வாங்குகிறார். அந்த பணத்தை சிலர் ஏமாற்றி விடுகின்றனர். இவர்களுக்கு கடன் கொடுத்தவர் பெரிய ரவுடி என்பதால், கடனை கேட்டு மிரட்டுகிறார். இறுதியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கிறார்களா? ஏமாற்றியவர்கள் யார்? அவரை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் பிரேம்ஜி வழக்கம் போல் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். இயக்குனர் இவரை சரியாக உபயோகப் படுத்தியிருக்கிறார். மதில் மேல் பூனை, டக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பரணி ஜெயபால் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு சிறிய கதையை எடுத்துகொண்டு அதை 1 மணி நேரம் 40 நிமிடத்தில் சொல்லி முடித்திருக்கிறார். திரைக்கதையை ரசிக்கும் படி இயக்கியதற்கு பாராட்டுகள். எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜய் இப்படத்தின் காட்சிகளை சரியாக வடிவமைத்துள்ளார். படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் பிரேம்ஜியே செய்திருப்பதால் அவருக்காவே மாஸ் பிஜிம் போட்டுள்ளார். பின்னனி இசை படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. 

மொத்தத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ டவுண்லோடு செய்யலாம்
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!