நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது by priya | @ | January 6, 2022 10:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுதமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய். 1995-ல் வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதற்கு பிறகு பாண்டவர் பூமி, இயற்கை, குற்றம் 23 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து அனைவரும் பாதிப்புக்குள்ளானார்கள். சினிமா பிரபலங்களில் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.அதில், நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டேன். அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி.. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…