இப்படியொரு வேலையை செய்துடாங்களே நம்ம திரிஷா..!! வைரலாகிய புகைப்படம் உள்ளே..!!


கடந்த மாதம் ஐ.நா அமைப்பின் ஒரு அங்கமான யூனிசெப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரபல நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி யூனிசெப்பின் சர்வதேச குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

அதில், உல‌கிலேயே ஐந்து வயதிற்கு உ‌ட்ப‌ட்ட அ‌திகமான குழ‌ந்தைகளை, இ‌ந்‌‌தியா கொ‌ண்டு‌ள்ளது.

ஆனால் இதுவரையிலும் அ‌ந்தக் குழ‌ந்தைகளு‌க்கு தடு‌ப்பு மரு‌ந்து முறையாக வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் அ‌தி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கடந்த 80 மற்றும் 90களில் தடுப்பு மருந்துகள் வழங்கும் முறையில் இந்தியா மிகச் சிறப்பாக நடைபெற்றது.


ஆனால் அதற்கு பிறகு முறையாக வழங்கப்படவில்லை என்று யூ‌னிசெ‌ப் அலுவல‌ர் ‌கியா‌னி மு‌ர்‌ஸி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய யூனிசெப் தலைவர் ஜோப் சக்காரியா,

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை போன்றவைக் குறித்த விழிப்புணர்விற்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்படுவார் என்று அறிவித்தார்.

அதன் பிறகு படப்பிடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு நலத்திட்ட பணிகளில் திரிஷா கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகில் உள்ள வட நெமிலி என்ற கிராமத்திற்கு சென்றார்.


அங்குள்ள மக்களிடம் கழிவறைகளின் முக்கியத்துவம், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதாரக்கேடு, கழிவறைகளை அமைப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார் த்ரிஷா.

அதன் பிறகு கிராம மக்களிடம் ஒரு மாதிரி கழிவறையை கட்டி காண்பித்தார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளுடன் பொதுமக்களின் தேவை மற்றும் இதர வசதிகள் குறித்தும் கலந்துரையாடி அறிந்து கொண்டார்.

விரைவில் அடுத்த நலத்திட்ட பணிகளை தொடங்க மீண்டும் அதே கிராமத்திற்கு வருகை தருவதாக கூறினார்.

அப்போது அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க தான் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!