அன்று அவர் சொன்னதுதான் இன்று எனக்கு வேதமாக இருக்கிறது..!! பூரிப்பில் சூப்பர் ஸ்டார்..!!!


கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மாவட்டம் வாரியாக ரசிகர்கள் வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்கள் மத்தியில் பேசிய ரஜினி கூறியதாவது,

இன்று 4வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கு. நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். கோவை வந்து எனக்கு மிக முக்கியமான இடம். அங்கு என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

என்னுடைய குருநாதர்களில் ஒருவர் சுவாமி சச்சிதானந்தர். அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி கவுண்டர் ஆவார், ஜமீன்தார் பரம்பரையை சேர்ந்தவர். பழனி சித்தர் அவர்களின் ஆசியால் பிறந்தவர்.


சுவாமி சச்சிதானந்தர் சொல்லி தான் நான் பாபா படம் எடுத்தேன். அவர் மகாசமாதி அடையும் முன்பு அவரை கடைசியாக பார்த்தவன் நான் தான். என் குரு தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமம் ஆணைக்கட்டியில் உள்ளது.

கோவை விமான நிலையத்திற்கு செல்லும்போது எல்லாம் ஒரு நிகழ்வு நினைவுக்கு வரும். அண்ணாமலை படம் ரிலீஸான நேரம், படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த நேரத்தில் நண்பர் வீட்டு திருமணத்திற்கு விமானத்தில் நான் சென்றேன், சிவாஜி சாரும் வந்திருந்தார்.

விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்னை பார்த்து ரஜினி வாழ்க, தலைவர் வாழ்க என்றதும் எனக்கு உடம்பில் பாம்பு ஓடுவது மாதிரி இருந்தது. அவ்வளவு பெரிய நடிகரை வைத்துக் கொண்டு என்னை புகழ்ந்தால் எப்படி இருக்கும். அவர் என்னை பார்த்து சிரிக்கிறார்.

என்னடா நழுவுற, உன் காலம்டா, நல்லா உழை, நல்ல படங்களை கொடு, வாடா என்றார் சிவாஜி சார். மதிப்பு வேண்டும் என்றால் குணாதிசயம் தேவை. சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு சாமிஜியை பார்க்க சென்றபோது அதே கோவை விமான நிலையத்தில் நீங்க இப்போ வர வேண்டாம். ஒரு நடிகரின் ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் வந்து போன பிறகு நீங்கள் வாங்க என்றார்கள். அப்படியே சிவாஜி சார் சொன்னது நினைவுக்கு வந்தது. காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக வருவார்கள். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் என்றார் ரஜினி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!