ப்ரியங்கா சோப்ராவின் விவாகரத்து?: உண்மையை உடைத்த அவரது தாயார் மது!

தளபதி விஜய்யுடன் இணைந்து தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

அதன்பின் அடுத்தடுத்து ஹிந்தியில் படங்கள் நடித்து அதிகபட்ச சம்பளம் பெரும் முன்னனி கதாநாயாகியாக உயர்ந்தார். ஹாலிவுட்டிலும் கால் பதித்து அங்கும் தன் திறமையால் முக்கிய பிரபலமாக முன்னேறியுள்ளார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலே செட்டில் ஆனார்.
இந்நிலையில் தான் ப்ரியங்காவிற்கும் நிக்கிற்கும் விவாகரத்து ஆகப்போவதாக பேச்சுகள் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கின. இதற்கு காரணம் பிரியங்கா தனது சோசியல் மீடியா பக்கங்களில் தன் பெயருடன் ஜோனஸ் என்றிருந்த தன் கணவரின் பெயரை நீக்கியிருப்பது தான்.

தற்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ப்ரியங்காவின் தாயார் மது சோப்ரா விளக்கம் கூறியிருக்கிறார். அதன்படி, இதுபோன்ற ஆதாரங்கள் இல்லாத பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!