அண்ணாத்த ரூ 200 கோடி வசூல் வந்தது உண்மையா? முழு விவரம்

அண்ணாத்த சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம்.
இப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், இளைஞர்களிடம் இப்படம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை, அதோடு பலரும் இப்படத்திற்கு மிக மோசமான நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினர்.

மேலும், அதெல்லாம் குடும்ப ரசிகர்களிடம் எடுப்படவில்லை, படம் முதல் 4 நாட்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

அதோடு, மழை வந்து வார நாட்கள் வசூலை கெடுக்க, மீண்டும் கடந்த சனி, ஞாயிறு கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில் அண்ணாத்த ரூ 200 கோடி வசூலை கடந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையாகவே அது கடந்த்தா என்றால் கேள்விக்குறி தான். ஆம், அண்ணாத்த தற்போது வரை தமிழகத்தில் ரூ 92 கோடி வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும், தெலுங்கில் ரூ 7 கோடி, கர்நாடகாவில் ரூ 10 கோடி, கேரளாவில் ரூ 2.5 கோடி, வட இந்தியாவில் ரூ 2 கோடி முறையே இப்படம் வசூல் செய்துள்ளதாம்.

வெளிநாடுகளில் இப்படம் ரூ 45+ கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் ரூ 160 கோடி வரை இப்படத்திற்கு வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் கூறுகின்றது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!