மோகன்லாலின் மரைக்காயர் திரைப்படம் ரிலீசாவது, தியேட்டரிலா..? ஓடிடியா..?

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 80 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் : அரபிக்கடலின்டே சிம்ஹம்.

இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியார், சுனில் ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த செய்தியின்படி மரைக்காயர் : அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் நேரடியாக ஓடிடி-யில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.

படக்குழுவின் இந்த முடிவு தியேட்டர்காரர்கள் மத்தியில் சலசலப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரள மாநில செய்தித்துறை அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது சமரசம் செய்து வைத்துள்ளாராம்.

அதன்படி மரைக்கார் திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்றும், அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸாகும் என்றும் சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!