4 சாரி – விமர்சனம்

நடிகர் கார்த்திக் அசோகன்
நடிகை சாக்‌ஷி அகர்வால்
இயக்குனர் சக்தி வேல்
இசை பிரசன்னா சிவராமன்
ஓளிப்பதிவு வெங்கடேஷ் பிரசாத்

நான்கு வித்தியாசமான கதைகள். வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி சாரி கேட்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும் டேனியல், அதனால் ஏற்படும் நிகழ்வுகளை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். இதில் பிக்பாஸ் டேனியல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், காமெடியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சாக்‌ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்சனை முளைக்கிறது. அதை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். சாக்‌ஷி அகர்வால் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காளி வெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இதில் காளி வெங்கட், ரித்விகா இருவரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஜான் விஜய், சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் பஸ் பயணம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஜான் விஜய்யின் எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
வாழ்க்கையில் தெரியாமல் ஒருவர் செய்த செயல்களால் ஏற்படும் விளைவுகளை இயக்குனர் சக்திவேல் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். நான்கு கதைகள் ஏற்கும் படி இருந்தாலும், அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.

பிரசன்னா சிவராமன் இசையும், வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘4 சாரி’ பாராட்டலாம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!