விரைவில் உருவாகவிருக்கும் தர்மதுரை 2..! தயாரிப்பாளர் அறிவிப்பு

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் தர்மதுரை.
சீனு ராமசாமி இயக்கி இருந்த இப்படத்தை, தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை யார் இயக்கவுள்ளார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை ஆர்.கே.சுரேஷ் வெளியிடவில்லை.

விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷே நடிக்கலாம் என்றும் சீனு ராமசாமி இயக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்..
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!