அஜித்தின் வலிமை பட ரிலீஸ் தேதி இதுவாக இருக்குமோ?- பிரபலம் போட்ட டுவிட்

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடித்துவரும் திரைப்படம் வலிமை.

வினோத் இயக்கத்திலேயே அஜித் நடிக்கும் இரண்டாவது படம் இது. படத்தின் படப்பிடிப்பு வேகமாக தொடங்கியது ஆனால் கொரோனா பிரச்சனை அப்படியே படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டது.

இப்போது படப்பிடிப்பு வேகமாக நடக்க முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

உடனே ரசிகர்கள் மத்தியில் படத்தின் ரிலீஸ் குறித்த பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன. படக்குழு அதிக விடுமுறை நாள் இருக்கும் தேதியை தான் தேர்வு செய்வார்கள் என்பது ரசிகர்களின் கருத்து.

அப்படி பிரபல திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 14ம் தேதி வெளியானால் நீண்ட நாள் விடுமுறை என்பதால் படம் ரிலீஸ் செய்ய நல்ல தேதி என டுவிட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!