நடிகர் அருண் விஜய் மகளா இது? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அருண் விஜய்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் என்னை அறிந்தால் அஜித்துடன் சேர்ந்து நடித்த பின்னரே இவரின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது.

சமீபத்தில் வெளியான தடையற காக்க, தடம், குற்றம் 23 ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தர தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

https://twitter.com/arunvijayno1/status/1138348113100304384

இந்நிலையில் இவருக்கு ஆர்த்தி மோகன் என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளின் பெயர் பூர்வி, இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூர்வி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் பூர்விக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.