பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா…? வருத்தத்தில் குடும்பத்தினர்..!!


குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் தொண்டாற்றி வருகிறார்.

அவரது சேவையை பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், உத்தரப்பிரதேசம் மாநில நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.


இந்நிலையில், நேற்று டெல்லியில் யூனிசெப் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, இன்று தனது பூர்வீக மண்ணான பரேலி நகருக்கு செல்ல விமான நிலையத்துக்கு வந்தார்.

ஆனால், இன்று காலை அங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவால் விமானங்கள் புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், தனது பயண திட்டத்தை தள்ளிப்போட்ட பிரியங்கா சோப்ரா, பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை நேரில் சென்று பெற்றுகொள்ள முடியாமல் போனதை எண்ணி மனம் உடைந்துபோய் உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று இவ்விழாவில் பட்டம் பெறும் இதர மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், உங்களை எல்லாம் விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!