விரைவில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் மாஸ்ஸான இரண்டாவது பாடல்?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் செம வைரலானது, மேலும் இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான நாங்க வேற மாறி பாடலும் சமீபத்தில் வெளியானது.

இப்பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வலிமை குறித்த பேட்டியில் “வலிமை படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மாஸ்ஸான தீம் இருக்கும், வலிமை படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும்.

அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது” என யுவன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!