தல அஜித்தின் அப்பாவிற்கு என்ன ஆச்சு? ரசிகர்களுக்கு வந்த சோகமான செய்தி

தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு என்று தனி இடம் உண்டு. அவர் கையசைத்தால் போது, நாங்கள் எதுவேண்டும் என்றாலும் செய்யத் தயாராக ரசிகர்கள் இருக்கின்றனர்.

இருப்பினும் அஜித், தன்னுடைய ரசிகர் மன்றத்தை எல்லாம் களைத்துவிட்டு, முதலில் உங்கள் அப்பா, அம்மாவை பாருங்கள், பின் என் படம் பிடித்திருந்தால் பாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.

என்ன தான் அஜித் தன் ரசிகர் மன்றத்தை களைத்தாலும், அவருடைய பிறந்தநாளோ அல்லது படம் ரிலீஸ் ஆகும் தேதியோ ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடுவர்.

அந்த வகையில் நாளை மே 1 தல அஜித்தின் பிறந்தநாள், அவருடைய பிறந்தநாளை கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தன ஒரு சோகமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் அவர்களின் அப்பா சுப்பிரமணி அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.