கமல் – வெற்றிமாறன் இணையவுள்ள படம் குறித்து வெளியான புதிய தகவல்! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் மிக சிறந்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெற்றிமாறன்.

இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியாக அசுரன் திரைப்படம் சிறந்த விமரசங்களை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார், அப்படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக உலகநாயகன் கமலின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படம் ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/s8VOc4yah5c” frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!