ஜெயலலிதா இருந்தா கமலை ஓடவிட்டிருப்பார் : காயத்ரி ரகுராம்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல் பேசியுள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது கமல், “இது முஸ்லீம்கள் அதிகம் இருக்கு பகுதி என்பதற்காக பேசவில்லை, காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

இது இந்து மதத்தையும், இந்துக்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கமலுக்கு ஆதரவாக திக கட்சியின் கீ வீரமணி, காங்கிரஸ் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காயத்ரி ரகுராம் எதிர்ப்பு:
வேறொரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கு கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள் தனமானது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ – பிரச்சாரத்தில் கமல் சர்ச்சை பேச்சு!

இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கீ வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிச்சாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.