‘வலிமை’ பர்ஸ்ட் லுக்…. இந்த தேதியில் வெளியாக வாய்ப்பு

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை விரைவில் படமாக்க உள்ளனர்.

வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள், ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். அவர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி வருகிற ஜூலை 15-ந் தேதி வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் அஜித் – எச்.வினோத் கூட்டணியில் இதற்கு முன் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனால் வலிமை படத்தின் அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!