மற்றுமொரு OTT அதிரடி! ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படமும் விரைவில் ரிலீஸ்.,

அண்மை காலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கொரோனாவால் நேரடியாக OTT தளங்களில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் Netflix-ல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் நேற்று சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைபடமும் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், இப்படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!