நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது… கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்

ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியதற்கு பதில் கிடைத்துள்ளது.

அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினி, உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.

அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி.

இந்நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த” என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!