சகோதரிகளுக்கு இதை பரிசாக கொடுங்கள்: பிகில் பட நடிகை அறிவுரை

பெப்பர் ஸ்பிரேவை உங்களது சகோதரிகளுக்கு பரிசாக கொடுங்கள் என்று பிகில் பட நடிகை வர்சா அறிவுரை கூறியுள்ளார்.

96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக நடித்து பிரபலமானவர் வர்ஷா போலம்மா. அதைத் தொடர்ந்து பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். அதில் அவர் நடித்த காயத்ரி கதாபாத்திரம் பல பெண்களை கவர்ந்தது.

பிகில் படத்திற்குப் பிறகு எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வர்ஷா அடிக்கடி சமூகத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து ட்வீட் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹைராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘பெப்பர் ஸ்பிரேவை உங்கள் சகோதரிகளுக்கு பரிசாக கொடுங்கள். அது மிகவும் விலை குறைவானது. விஜய் அண்ணன் சொன்னது போல் நல்ல விஷயங்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தால் சமூகத்திற்கு உதவியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விஜய் பிகில் படத்தின் இசைவெளிட்டு விழாவில் பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த உயிரிழந்த சுபஸ்ரீ குறித்துப் பேசினார்.

அப்போது அதில், தேவையில்லாத விஷயங்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வதை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை டிரெண்ட் செய்யுங்கள்’ என்றார். அதை மனதில் வைத்து தான் வர்ஷா இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!