பிக் பாஸ் எலிமினேஷனில் நடக்கும் ஏமாற்று வேலை.. உண்மைகளை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்.!

பிக் பாஸ் எலிமினேஷனில் குளறுபடிகள் நடப்பது உண்மை தான் என டேனி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் டேனி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் ஓட்டெடுப்பில் நம்பகத்தன்மை இல்லை. நாங்கள் கலந்து கொண்ட போது பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்ட போது எங்களுக்கும் இதே சந்தேகம் எழுந்தது.

நான் வெளியேறிய போது என் மனைவி எனக்கு சில ஆதாரங்களை காண்பித்தார். மக்களின் ஆதரவு சென்றாயனுக்கு இருக்கும் போது அவர் எப்படி வெளியேற்றப்பட்டார் என்பது தெரியவில்லை என பேசியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் பற்றி போட்டியாளரே இப்படி பேசி இருப்பது நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் பொய்யா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.