டுவிட் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்..!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


நாட்டை உலுக்கி மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது 2ஜி முறைகேடு வழக்கு .

பலரும் வழக்கில் வித்தியாசமான தீர்ப்பு வரும் என எதிர்பார்த்த போது இந்த வழக்கில் சம்மந்தபட்ட அனைவரும் விடுதலை என நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பிற்கு பிறகு பல அரசியல் கட்சி தலைவர்களும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கனிமொழி விடுதலையானதால் திமுக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் 2 ஜி வழக்கை பற்றி ஒரு சர்ச்சை செய்தியை பதிவிட்டுள்ளார்.


அதில் ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டு பயலே-1 இன்று விமர்சனம் ஆக உள்ளதால் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

மேலும் ஜெயலலிதா , சசிகலா நடிப்பில் உருவான திருட்டு பயலே-2 படம் போல் உங்களுக்கு தீர்ப்பு இன்று நன்றாக இருக்கும் என நம்புகிறேன் என பதிவு செய்திருந்தார்.

ஆனால் தீர்ப்பு வேற மாதிரி வந்ததால் ஏமாற்றமடைந்த சித்தார்த் பழைய டுவிட்டை நீக்கி சூப்பர் ஹிட் ரிப்போர்ட் என டுவிட் செய்துள்ளார்.

தூய்மையான இந்திய அரசியலுக்கு என் வாழ்த்துகள் இனி 2ஜியே கிடையாது என கோபமாக டுவிட் செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!