லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கடும் கோபம்..!! வாயடைந்த அருவி இயக்குனர்..!!


சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் ரசிகர்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் பின் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார் இயக்குனர்

இந்த படம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்னை கிண்டல் செய்வது போல இருந்தாலும் அருவி நல்ல படம் என்றே கூறியிருந்தார். இந்நிலையில், திடீரென அருவி இயக்குனரை விமர்சித்து கடுமையான கோபத்துடன் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.


அவர் கூறியிருப்பதாவது, அநீதிக்கு ஆளான பெண்களுக்கு உதவி வரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அருவி படத்தின் இயக்குனர் கேலிக்குள்ளாக்கி கிண்டல் செய்துள்ளர்.

ஒரு பெண்ணை மையமாக வைத்து படம் எடுக்கும்போது அதில் இன்னொரு பெண்ணை அதில் தவறாக சித்தரிப்பது மோசமான செயல் இல்லையா..?. உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு மதிப்பளிக்காதவர்கள் மத உணர்வுகளுக்கு எப்படி மதிப்பளிப்பார்கள். இயக்குனருக்கு தைரியம் இருந்தால் கேமராவுக்கு முன்னால் அமர்ந்து என்னை நேருக்கு நேர் சந்தித்து என் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!