99 சாங்ஸ் – விமர்சனம்

நடிகர் எஹன் பாட்
நடிகை எட்ல்சி
இயக்குனர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி
இசை ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு ஸ்ரீநிவாஸ் ஆச்சாரி, டனே சதம்
சின்ன வயதில் இருந்தே இசையை உயிராக நேசிக்கும் இளம் பாடகரான நாயகன், ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். இந்த காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. ‘‘நீ நூறு பாடல்களை இசையமைத்து கொண்டு வா… உனக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’’ என்கிறார்.

அவருடைய நிபந்தனையை நாயகன், ஏற்றுக்கொள்கிறார். நூறு பாடல்களை தேடி, அவர் தன் இசைப்பயணத்தை தொடங்குகிறார். மது பழக்கம் கூட இல்லாத அவரிடம், விளையாட்டாக போதை மருந்தை நண்பர் செலுத்துகிறார். அந்த போதையில் கார் ஓட்டிய நாயகன், விபத்துக்குள்ளாகிறார்.

போலீஸ் வருகிறது. சோதனையில், நாயகன் போதை மருந்து சாப்பிட்டது தெரியவர அவரை சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறார்கள். அதன் பிறகு நாயகன் என்ன ஆகிறார்? அவருடைய காதல் ஜெயித்ததா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் எஹன் பாட், மிக அருமையான தேர்வு. கதாநாயகி எட்ல்சி, தன் அழகால் வசீகரிக்கிறார். மனிஷா கொய்ராலாவை தவிர முக்கிய கதாபாத்திரங்களில் அத்தனை பேரும் புதுமுகங்கள்.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு, முதல் பாதியில் இல்லாதது பின்னடைவு. ஒரே வரியில் சொல்லிவிடக் கூடிய எளிமையான கதை. ஏ.ஆர்.ரகுமானே எழுதியிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்ப திரைக்கதையை வளர்த்து இருப்பார்கள் போல தெரிகிறது. சில இடங்களில் வசனம் புரியவில்லை.

படத்தின் உண்மையான நாயகன் என்றால், அது ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பாடல்களும் தான். வசீகர இசையால் மாயாஜாலம் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாஸ் ஆச்சாரி மற்றும் டனே சதமின் ஒளிப்பதிவு, வேற லெவல். ஹாலிவுட் பாணியில், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில் ‘99 சாங்ஸ்’ இசை விருந்து.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!