முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

தமிழில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின் போது இதனை உறுதிப்படுத்தினார். இயக்குனர் லிங்குசாமியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!