பிரபல தொகுப்பாளினி மனு தாக்கல்..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!


பிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினியும் அவரது கணவரும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சின்னத்திரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நம்ம DD, இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது அதுவும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.


மேலும் தற்பொழுது DD வயது 34 ஆகும், சின்னத்திரை மற்றும் தனுஷின் ப.பாண்டி திரைப்படத்தின் கதாபாத்திரத்தின் நடிகையுமான DDஎன அழைக்கப்படும் திவ்யதர்ஷி விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியுள்ளார்.

சமீப காலமாக DD சினிமாவில் கவனம் செலுத்தி வருவது மாமியார் மற்றும் கணவருக்கு பிடிக்காததால் இந்த முடிவை இருவரும் சுமூகமாக பேசி எடுத்திருப்பதாக டிவிட்டரில் பரவிவருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!