ஜோடி மாறிய ஓவியா.. வருத்தத்தில் ஆரவ்..!! கொண்டாட்டத்தில் ஓவியா ஆர்மி..!!!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா. ஆரவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே அவர் வெளியேறினார். இது ரசிகர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது ராகவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து ஆரவுடன் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.


ஆனால் தற்போது ஆரவ் அந்த படத்தில் இருந்து தூக்கப்பட்டார். அந்த இடத்திற்கு ரெமோ பட நடிகர் அன்சன்பால் நடிக்கிறார். அன்சன் பால் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேசுக்கு மாப்பிள்ளையாக நடித்திருப்பார். அதோடு சமீபத்தில் வெளியான சோலோ படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவர்தான் ஓவியாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். ஓவியாவுக்கு ஜோடி போடும் நேரம் அவர் மேலும் இரண்டு மலையாள படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!