அவரும் நானும் ஒரே கட்சி… பிரியாணி கட்சி..!! சீரியல் நடிகை ஓபன் டாக்..!!


“டா ன்ஸரான நான், அந்தப் பிம்பத்தை ஓவர்கம் பண்ற அளவுக்கு ஆக்டிங்ல பிஸியாகிட்டேன். ரெண்டுமே மக்களை மகிழ்விக்கும் விஷயம் என்பதால், மக்களிடம் வரவேற்பும் பாராட்டும் கிடைச்சிருக்கு” – உற்சாகமாகப் பேசுகிறார் ஸ்வேதா. சன் டிவியின் ‘அபூர்வ ராகங்கள்’ சீரியலில் நடித்துவருபவர்.

“ஆக்டிங்ல ரொம்பவே பிஸியாகிட்டீங்க…”

“சின்ன வயசுலேருந்து டான்ஸ்தான் என் அடையாளம். ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்திட்டிருந்த சமயத்தில், ‘கனா காணும் காலங்கள்’ வாய்ப்பு வந்துச்சு. அடுத்து சன் டிவியின் ‘கார்த்திகைப் பெண்கள்’ நல்ல அடையாளம் கொடுத்துச்சு. பிறகு, ஃபாரீனுக்குப் படிக்கப் போயிட்டேன். திரும்பி வந்ததும் டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரா இருந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரை, டான்ஸராதான் என்னைப் பலருக்கும் தெரியும். இப்போ, நடிகையா அங்கீகரிச்சு இருக்காங்க. காரணம், ‘அபூர்வ ராகங்கள்’ சீரியல். அந்த சீரியலில் நெகட்டிவ் ரோல். விஜய் டிவியின் ‘சின்னத்தம்பி’ சீரியலில் பாசிட்டிவ் ரோல். அடுத்து, கலைஞர் டிவியில் ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். முன்னாடி பாண்டிச்சேரியில் தங்கியிருந்தேன். இப்போ, ஃபேமிலியோடு சென்னையில் செட்டில் ஆகிட்டேன்.”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

“இடைவெளி விட்டு நடிப்புக்கு வந்தபோது தடுமாற்றம் இருந்துச்சா?”

“ரீ-என்ட்ரி நடிப்பில் ரீச் இருக்குமா? சிறப்பா நடிக்க முடியுமானு நிறையத் தயங்கினேன். டைரக்டரும், உடன் நடிக்கும் பலரும், ‘உன்னால் நல்லா நடிக்க முடியும்’னு நம்பிக்கை கொடுத்தாங்க. கொஞ்ச நாளிலேயே ஆக்டிங் சூப்பரா செட்டாகிடுச்சு. சக டீம் மெம்பர்ஸ் ஃபேமிலி நண்பர்கள் மாதிரி பழகுவோம். என் வீட்டுப் பிரியாணிக்கு ‘அபூர்வ ராகங்கள்’ டீம் மேட்ஸ் பலரும் ரசிகர்கள்.”

“அதென்ன பிரியாணி சீக்ரெட்?”

” ‘அபூர்வ ராகங்கள்’ சீரியலின் முதல் நாள் ஷூட்டிங், என் பிறந்தநாளில் வந்துச்சு. டீம் மேட்ஸ் ட்ரீட் கேட்டாங்க. அடுத்த நாளே, வீட்டிலிருந்து பிரியாணி செஞ்சு கொண்டுபோனேன். ‘பிரியாணி சூப்பர். அடிக்கடி கொண்டுவா’னு கேட்க, அதுவே வழக்கமாயிடுச்சு. நடிகர் அஜித் அடிக்கடி பிரியாணி சமைச்சு நண்பர்களுக்குப் பரிமாறுவார்னு தெரியும். அப்படித்தான் நானும். அவரும் நானும் ஒரே கட்சி… பிரியாணி கட்சி. இது தவிர, அடிக்கடி ஸ்வீட், சாக்லேட், கிஃப்ட் என டீமில் அன்பை ஷேர் பண்ணிப்போம்.”

“இப்பவும் டான்ஸ் கிளாஸ் எடுக்குறீங்களா?”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


“என் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டபோது டான்ஸ்தான் கை கொடுத்துச்சு. ஆக்டிங் ரீ-என்ட்ரிக்கு முன்னாடி, பாண்டிச்சேரியில் ஜூம்பா டான்ஸ் கிளாஸ் எடுத்துட்டிருந்தேன். இப்போ நேரம் இல்லாததால் கிளாஸ் எடுக்கிறதில்லை. ஆனால், கார்ப்பரேட் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஆடிட்டிருக்கேன். வீட்டுல ஃப்ரீ டைம் கிடைக்கும்போது, யாராச்சும் ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க கிடைச்சா அவ்வளவுதான். டான்ஸ் சொல்லிக்கொடுத்தே அவங்களை டயர்டு ஆக்கிடுவேன்.”

“ஆக்ஸிடென்ட் பிரச்னையின் தாக்கம் முழுமையா குணமாகிடுச்சா?”

” ‘மானாட மயிலாட’ முடிச்சுட்டு ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில் போட்டியாளரா இருந்தபோது, ஆக்ஸிடென்ட்டில் கால் ஃப்ராக்சர் ஆகிடுச்சு. இப்பவும் சில சமயங்களில் கால் வலி இருக்கும். ஆனாலும், அந்த வலியைத் தாண்டி என் வேலையில் கவனம் செலுத்திட்டிருக்கேன்.”

“சினிமா முயற்சிகள் எடுத்துட்டிருக்கீங்களா?”

“சின்னத்திரையே எனக்கு செட்டாகிடுச்சு. அதனால், சினிமாவில் நடிக்கவோ, கோரியோகிராபராகவோ எந்த முயற்சியும் எடுக்கலை. ஆனாலும், மனசுல ஆசை இருக்கு. சூழ்நிலை அமைஞ்சா, நிச்சயம் சினிமாவில் இறங்குவேன். தவிர, பிசினஸ் பண்ற என் ஃப்ரெண்டுக்கு நிறைய உதவியா இருக்கேன். எதிர்காலத்தில் டான்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கணும்; நிறைய ஏழை குழந்தைகளுக்கு இலவசமா சொல்லிக்கொடுக்கணும்னு ஆசை. ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம்னு பிளான் பண்ணியிருக்கேன். அதுக்குப் பிறகு, நிச்சயம் இன்ஸ்டிட்யூட் வேலையை ஆரம்பிச்சுடுவேன்.”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!