அவரிடம் இதை பத்தி கண்டிப்பா கேட்கனும்..!! எதிர்பார்ப்பில் சின்னத்திரை நடிகை..!!


நடிகை வாணிபோஜன். மாடலிங் துறையில் இருந்து சீரியல் நடிகையாக வளர்ந்தவர். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

தொலைகாட்சி தொடர்களில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திகொள்ளாமல் அவ்வப்போது கிடைக்கும் விளம்பர வாய்ப்புகளையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு நடித்துவருகிறார். இந்நிலையில், தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார் நடிகை வாணி போஜன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதில் பேசிய அவர், வாணி போஜனுடன் எப்போது நடிக்க போகிறீர்கள்? என்ற கேள்வியை விஜய் சாரிடம் கண்டிப்பாக கேட்க்கனும்..! ஆனால், விஜய் சார் யார் அது வாணி போஜன் என்று தான் பதில் கூறுவார் என்பது எனக்கு தெரியும் என சில்லறையை சிதறவிடுகிறார் வாணி போஜன்.

தொடர்ந்து பேசிய அவர், அஜித் சாரை சந்தித்தால் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துகொள்ளவேண்டும் என்று கேட்பேன் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!