மீண்டும் தொடங்கவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.

மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!