தொகுப்பாளினியின் கணவருக்கு தளபதி செய்த செயல்..!! வியப்பில் தம்பதி..!!


சன் டிவியில் தொகுப்பாளியாக உள்ள மணிமேகலை. இவர் சமீபத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி பிரபல உதவி நடன இயக்குனர் ஹூசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதில் ஹூசைனுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. விஜய் எப்போமே இயக்குனர் முதல் சின்ன சின்ன கலைஞர்கள் வரை அனைவரையும் நல்ல விஷயங்களுக்காக பாராட்டுவார்.


அண்மையில் திருமணம் செய்து கொண்ட தொகுப்பாளினி மணிமேகலை ஹுசைன் ஆகிய இருவரும் தங்களது காதல் திருமணம் பற்றி நிறைய பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்ற மெர்சல் அரசன் என்ற பாடலுக்கு ஹுசைன் அவர்கள் தான் துணை நடன இயக்குனராக பணியாற்றினாராம். அப்போது இளைய தளபதி விஜய், ஹுசைனிடம், நீங்கள் இன்னும் நிறைய செய்யனும், அடுத்து உங்களை நான் வேறொரு இடத்தில் பார்க்கனும் என்று பாராட்டினாராம்.

அவருடைய அந்த பாராட்டு எனக்கு பெரிதாக இருந்தது என்று ஹுசைன் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!