சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம், இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், மிக குறுகிய காலத்திலே அதிகப்படியான ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.

மேலும் தற்போது இவர் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், அடுத்த மாதம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் OTT வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றது. அதன்பின் இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி என வரிசையாக திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!