நிகழ்சியில் வீணாய்ப்போகும் உணவுகள்தான் பயன்படுத்தப்படுகின்றது..!! தொகுப்பாளர் ரியோராஜ்


தொகுப்பாளரும், சீரியல் நடிகருமான ரியோ ராஜ் தற்போது சரவணன் மீனாட்சி என்ற தொலைகாட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மட்டுமில்லாது, ரெடி ஸ்டேடடி போ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் உணவுப்பொருட்கள் விணாக்கப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவந்தார்கள். இந்நிலையில், தொகுப்பாளர் ரியோ இது குறித்து விளக்கமளித்துள்ளார். நாங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாக இருக்கும் காய்கறிகளை விலைக்கு வாங்கி வந்து தான் நிகழ்ச்சிக்கு பயன்படுத்துகிறோம். எங்கள் நிகழ்ச்சியில் வீணாக்கப்படுவது எதுவென்றால் தண்ணீரும், ஐஸ் கட்டியும் தான் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!