நிஜ வாழ்க்கையிலும் சிம்பிளாகதான் இருப்பேன் : ரஜினிகாந்த்!!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘2.0’ படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன்னர் துபாயில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த படத்தில் பாடல்கள் நாளை துபாயில் உள்ள 7ஸ்டார் ஓட்டலில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இன்றைய பிரஸ்மீட்டில் ரஜினியின் எளிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘`நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால்தான்’ என்று நகைச்சுவையுடன் கூறினார். அவருடைய இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்தது


இந்த பிரஸ்மீட்டில் இயக்குநர் ஷங்கர் கூறியபோது `2.0, திரைப்படம் ‘எந்திரன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி இல்லை. இது ஒரு தனி திரைப்படம்’ என்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0 திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருப்பதாகவும், நாளை 2.0 திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!