அரசு அறிவித்தாலும் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது- புதிய பிரச்சனை

கொரோனா தொற்று காரணமாக பல தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதில் ஒன்று சினிமா துறை, படப்பிடிப்போ, திரைப்படங்கள் வெளியீடு என எதுவும் நடக்கவில்லை.

இடையில் அன்றாட சம்பளம் வாங்குபவர்கள் என செய்திகள் சினிமா பிரபலங்களால் உதவிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் 50% கூட்டத்துடன் சினிமா திரையரங்குகளை திறக்கலாம் என அரசு நீண்ட ஆய்வுக்கு பின் அறிவித்தனர்.

இதனால் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒளிபரப்பு (VPF) கட்டணத்தை நீக்கும் வரை புது திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!