‘எனது வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல விஷயம்’ – தளபதி விஜய்யின் நட்பு குறித்து பதிவிட்ட பிரபல இயக்குனர்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா, இவர் தற்போது தளபதி விஜய் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலாயுதம், தீபாவளியில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி நேற்றுடன் 9 ஆண்டு ஆகியுள்ளதால் இயக்குனர் மோகன் ராஜா இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆம் அதில் “எனது வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல விஷயம், தளபதி விஜய் எனக்கு நண்பன் ஆனது. மேலும் அவரின் ரசிகர்கள் எனது நலம் விரும்பிகளாக அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!